உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சாத்துார் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

 சாத்துார் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

சாத்துார்: சாத்துார் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பவள விழா பஸ்ஸ்டாண்டை விரிவாக்கம் செய்திட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சாத்துாரில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.போதுமான இட வசதி இல்லாத நிலையில் பஸ் ஸ்டாண்டிற்குள் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், அருப்புக்கோட்டை ராஜபாளையம், பந்தல்குடி, கோவில்பட்டி, எட்டையபுரம் பகுதிகளைச் சேர்ந்த டவுன் பஸ்கள் மட்டுமே வருகின்றன. மற்ற ரூட் பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. தற்போது தனியார் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் பஸ் ஸ்டாண்டிற்குள் 20 பஸ்கள் மட்டுமே நின்று செல்லும் நிலை உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் தனியார் ,அரசு டவுன் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் போதுமான இட வசதி இல்லாததால் பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு பஸ்டாண்டுக்குள் அரசு டவுன் பஸ்சும் தனியார் டவுன் பஸ்சும் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் இடங்களை விலைக்கு வாங்கி தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டினை விரிவு படுத்துவதன் மூலம் இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை