உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இந்தாண்டும் திருநங்கைகள் சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு

இந்தாண்டும் திருநங்கைகள் சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு திருநங்கைகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஆதார் கார்டு திருத்தம், இன்சூரன்ஸ், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல் போன்றவற்றிற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதே போன்று இந்தாண்டும் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் 2024 ஜூன் மாதம் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சமூக நலத்துறை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த முகாமில் திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல், ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல், வாக்காளர் அட்டை வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டது. அந்நாளில் திருநங்கைகள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர். இருப்பினும் மாவட்டத்தில் இன்னும் நிறைய திருநங்கைகள் தங்கள் அடிப்படை தேவைகளான நலவாரிய அட்டைக்கு விண்ணப்பிக்காமல், அது குறித்து விழிப்புணர்வு பெறாமல் உள்ளனர். மேலும் மற்ற தேவைகளான மருத்துவக்காப்பீடு, வாக்காளர் அட்டையும் பலர் பெறாமல் உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சி.எஸ்.ஆர்., நிதியில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே அவர்களுக்கு இந்தாண்டும் சிறப்பு முகாம் நடத்தி, மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கும் தேவையானவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை