உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏ.டி.எம்., அமைக்க எதிர்பார்ப்பு

ஏ.டி.எம்., அமைக்க எதிர்பார்ப்பு

காரியாபட்டி : காரியாபட்டியில் கள்ளிக்குடி ரோட்டில் ஏ.டி.எம்., அமைக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். காரியாபட்டியில் பணம் தேவைப்படுவோர் பஸ் ஸ்டாண்ட், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்., களுக்கு சென்று வர வேண்டி இருக்கிறது. அங்கு எப்போதும் கூட்டமாக இருக்கும். நீண்ட வரிசையில் காத்திருந்து எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அவசரத்திற்கு அப்பகுதிக்கு சென்று வர முடியாத நிலையில் பலர் உள்ளனர்.இதனை கருத்தில் கொண்டு, கள்ளிக்குடி ரோட்டில் ஏ.டி.எம்., அமைந்தால் அப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கள்ளிக்குடி ரோட்டில் கூடுதலாக ஏ.டி.எம்., மையம் அமைக்க வங்கிகள் முன் வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ