உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணம் இல்லா பரிவர்த்தனை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வேண்டும்

பணம் இல்லா பரிவர்த்தனை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வேண்டும்

தாலுகாக்களில் உள்ள வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மானிய விலையில் விதைகள், விவசாய உபகரணங்கள், பல்வேறு வகையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, வேளாண் விரிவாக்கம் மையங்களில் பெறப்படும் அனைத்து பொருட்களையும் விவசாயிகள் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி பெற வேண்டும் என்ற உத்தரவை அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதன்படி விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் பொருட்களை ஏடிஎம் அட்டை, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டது. அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் பணம் மில்லாமல் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் கருவியும் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஆன்லைன் பரிவர்த்தனையில் அப்டேட் இல்லாமல் உள்ளனர். இதில் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் பட்டன் அலை பேசிகளை தான் வைத்துள்ளனர். இதனால்ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை உள்ளது. இடு பொருட்களை பெற உதவி வேளாண்மை அலுவலர், வேளாண் அலுவலர், டெப்போ மேலாளர் ஆகியோர் ஆன்லைனில் வரிசையாக பரிந்துரை செய்த பின், தேவையான இடுபொருட்களை பெற விவசாயிகளின் அலைபேசியில் பணம் செலுத்த உத்தரவு வந்தால் மட்டுமே பொருட்களை பெற முடியும். இதனால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.தேவைப்படும் இடு பொருட்களை உடனடியாக தனியார் கடைகளுக்குச் சென்றால் பணம் கொடுத்து வாங்கிச் சென்று விடலாம். ஆனால் வேளாண் விரிவாக்க மையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பணம் இல்லா பரிவர்த்தனை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து சிறிது சிறிதாக இதை அமலுக்கு கொண்டு வரலாம். பழைய திட்டத்தையும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ