மேலும் செய்திகள்
டிச.11க்குள் எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் சமர்பிக்கலாம்
10 minutes ago
ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பொறியாளர் கைது
3 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையில் நகரின் தெற்கு பகுதி கண்மாய்கள் நிரம்பிய நிலையில் வடக்கு பகுதி கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மம்சாபுரம் பகுதி கண்மாய்கள் நிரம்பி மறுகால் விழுந்ததால் ஸ்ரீவில்லிபுத்துார் தெற்கு பகுதிகளில் உள்ள பெரியகுளம், சோழங்குளம், அத்திகுளம் தெய்வேந்திரி, நொச்சிகுளம் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரம் வடக்கு பகுதியில் உள்ள திருவண்ணாமலை கோயில் கோனேரி தெப்பம், தட்டாங்குளம், நாயக்கர் குளம், வடமலைக்குறிச்சி கண்மாய்களுக்கு திய அளவிற்கு தண்ணீர் வரத்தில்லை. இதனால் இப்பகுதி பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில்; நகரின் தெற்கு பகுதியில் பெய்யும் அளவிற்கு வடக்கு பகுதியில் போதிய அளவிற்கு மழை பெய்யவில்லை. மேலும் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வடமலைகுறிச்சி கண்மாய் வரை உள்ள பல்வேறு கண்மாய்களின் நீர்வரத்து பாதைகள் மண்மேவி அடைபட்டு கிடக்கிறது. பந்தப்பாறையில் இருந்து பிள்ளையார் நத்தம் வரை அதிக அளவில் மரங்கள் வளர்த்து அதிக மழை பெய்யும் நிலையை ஏற்படுத்தினால் மட்டுமே வடக்கு பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும். இதற்கு அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
10 minutes ago
3 hour(s) ago