உழவாரப்பணி
காரியாபட்டி : காரியாபட்டி முடுக்கன்குளம் சிவகாமசுந்தரி அம்பலவாணர் கோயிலில் உழவாரப்பணி, சாயல்குடி சிவனடியார் குழு ரவிச்சந்திரன் குருக்கள் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் சுந்தரம், மங்களநாதன், சரவணன், மீனாட்சிசுந்தரம், சிவசாமி, பிச்சை, ஜெயராஜ், ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார்.