மேலும் செய்திகள்
சாலை நடுவே மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
23-Sep-2024
விருதுநகர்: விருதுநகர் பட்டேல் ரோட்டில் குடிநீர் குழாய் சீரமைப்பிற்காக தோண்டிய பள்ளம் மாதக்கணக்காகியும் பணிகள் முடிக்கப்படாததால் பள்ளத்தில் வாகனங்கள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அருகே செல்லும் பட்டேல் ரோட்டில் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு சரி செய்வதற்காக பள்ளம் தோண்டி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை பணிகள் முடிக்கப்பட்டு பள்ளம் மூடப்படவில்லை. இந்த பள்ளத்தில் தற்போது குடிநீர், மழை நீர் தேங்கி நிரம்பி நிற்கிறது. இவ்வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்காக செல்பவர்கள் தினமும் சென்று வருகின்றனர். வாகனங்களில் செல்லும் போது நிலை தடுமாறி விழும் விபத்து அபாயம் உள்ளது. மேலும் மருத்துவமனை பகுதியாக இருப்பதால் நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ்கள் இவ்வழியாக அதிக அளவில் செல்கின்றன. இந்த பள்ளத்தால் ரோடு முழுவதும் சேதமாகி இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இவ்வழியாக இரவு நேரத்தில் டூவீலரில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அருகே பட்டேல் தெருவில் குடிநீர் குழாய் பிரச்னையை சீரமைத்து பள்ளத்தை மூட வேண்டும்.
23-Sep-2024