உள்ளூர் செய்திகள்

பெண் பக்தர் பலி

ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் தாலுகா தென்கரை சுப்ரமணியின் மனைவி மகா 55. இவர் புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று உறவினர்களுடன் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்தார். காலை 10:30 மணிக்கு கோயிலுக்கு செல்லும் வழியில் சின்ன பசுக்கடை ஏற்றம் என்ற இடத்தில் மலை ஏறும் போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். அறநிலையத்துறையினர், வனத்துறையினர் உடலை பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !