பள்ளி மாணவர்களுக்கு நுண்கலை விழா
காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் முத்தமிழ் மன்றம் சார்பாக, தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு நுண்கலை போட்டிகள் நடத்தப்பட்டன.நிறுவனர் முகமது ஜலீல் துவக்கி வைத்தார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 35க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதியபனா, செயின்ட்மேரிஸ், மகாத்மா பள்ளிகள் முதல் 3 இடங்களை பெற்றது. பரிசுகளை கல்லூரி நிர்வாகிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா வழங்கினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் லட்சுமணராஜ், நர்மதா, ரமேஷ், கண்ணன், கார்த்திகுமார், மலைச்சாமி, ஷேக் மைதீன் உட்பட பலர் செய்திருந்தனர்.