திடக்கழிவுகளை தீயிட்டு எரித்தால் அபராதம்
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ரோட்டோரங்களிலும், பொது இடங்களிலும் குப்பை, இதர திடக்கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திடக்கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல், உடல் நலம் பாதிக்கப்படும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை அகற்ற போதிய ஏற்பாடுகள் செய்யவும், திடக்கழிவு சேவையில் ஈடுபட்டு சுகாதாரம் பேணி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செலவினத்தை அதன் பொறுப்பாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து செயல்படுத்தவும், நச்சுத் தன்மை உடைய கழிவுகளையோ, அழுகிய கழிவுகளையோ, மலக்கழிவுகளையோ, மருத்துவக்கழிவுகளையோ மாற்றம் செய்தல், சாலைகளில் போடுதல் மற்றும் கழிவு நீர்க் கால்வாய்களில் கொட்டுதல் தடைசெய்யப்படுகிறது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை, அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது, என்றார்.