மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சேதம்
13-May-2025
சிவகாசி : சிவகாசியில் காலி இடத்தில் உள்ள முட் கழிவுகளில் பற்றிய தீ கட்டடத்தில் பரவியதை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். சிவகாசி -- விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை அகற்றி அதே பகுதியில் குவித்து வைத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணி அளவில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் கழிவுகளில் தீ பற்றியது. கழிவுகளில் பற்றிய தீ, அருகே பயன்பாடு இன்றி இருந்த கட்டடத்திற்கும் பரவியது. கதவை உடைத்து தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உடனடியாக தீயை அணைத்ததால் அருகில் இருந்த மற்ற கட்டடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
13-May-2025