உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீயணைப்பு துறை ஒத்திகை நிகழ்ச்சி

தீயணைப்பு துறை ஒத்திகை நிகழ்ச்சி

ராஜபாளையம்: ராஜபாளையம் ஏ.கே.டி தர்மராஜா பெண்கள் பள்ளியில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு மாணவர்கள் இடையே தீ விபத்தின் போது செய்ய வேண்டியவை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையில் 10 பேர் கொண்ட தீயணைப்பு குழு வீரர்கள் தீ பிடிக்கும் நேரங்களில் அருகில் உள்ள பொருட்களை வைத்து தீயை கட்டுப்படுத்தும் நடைமுறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.தீ விபத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதலுதவி, முகத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, பெரும் தீ விபத்தின் போது அழைக்க வேண்டிய தொலைபேசி எண் பற்றி விளக்கம் அளித்து மாணவர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி