உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு கழிவில் தீ விபத்து

பட்டாசு கழிவில் தீ விபத்து

சிவகாசி: சிவகாசி அருகே முருகன் காலனியில் பட்டாசு கடை முன்பு கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீ விபத்து ஏற்பட்டது.சிவகாசி பி.கே.என்., ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமாருக்கு சொந்தமாக நாரணாபுரம் ரோடு முருகன் காலனியில் பட்டாசு கடை உள்ளது. இந்த கடை முன்பு குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. மேலும் பட்டாசு கழிவுகளும் குப்பையில் கிடந்தது. இந்நிலையில் குப்பையில் தீ வைக்கப்பட்டது. பட்டாசு கழிவுகளும் கிடந்ததால் சத்தத்துடன் குப்பை தீப்பிடித்து எரிந்தது. சிவகாசி தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை