கடையில்தீ விபத்து
சாத்துார்: சாத்துார் படந்தால் தென்றல் நகரை சேர்ந்தவர் சங்கர், 42. நேற்று காலை 9:00 மணிக்கு இவருடைய காயலான் கடைக்கு முன்பு போட்டிருந்த பழைய பிளாஸ்டிக் சாமான் பொருட்களுக்கு இடையில் பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை வெளியேற்றுவதற்காக ஒரு பக்கம் தீ வைத்து புகை மூட்டி உள்ளனர்.அருகிலேயே இருந்த பழைய பேப்பர்களில் தீ வேகமாக பரவியதில் கடை முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது.விபத்தில் யாரும் காயமடையவில்லை. சாத்துார் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.