மேலும் செய்திகள்
சீல் வைத்த ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது
06-Jul-2025
சாத்துார்: வெம்பக்கோட்டை புல்லக்கவுண்டன்பட்டி வாகினி பயர் ஒர்க்ஸ் விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலையை நேற்று போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் விஜய கரிசல்குளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் 30, கருப்பசாமி 26, ஆகியோர் குருவி வெடி தயாரித்து கொண்டிருந்தனர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். * இதே போல் கண்டியாபுரம் ஜே.பி., மித்ரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் ஆன நிலையில், நேற்று போலீசார் இந்த ஆலையை ஆய்வு செய்தபோது, அங்கு ஒரு அறையில் பட்டாசுக்கான திரி தயாரிப்பது தெரிந்தது. போலீசாரை கண்டதும் இருவர் தப்பி ஓடினர். போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Jul-2025