உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளம்: குளிக்கத்தடை

அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளம்: குளிக்கத்தடை

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையால் அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெய்து வரும் மழையால் ராஜபாளையம் நகராட்சி குடிநீர் தேக்கமான 6வது மைல் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து தொடர்ந்தது. நேற்று காலை 2 மணி நேரம் பரவலாக பெய்த மழையால் அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரத்து அதிகரித்ததால் தடுப்பணை தாண்டி ஆற்றில் தண்ணீர் பெருகிய நிலையில் பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே அய்யனார் கோயிலுக்கு புதன், சனி என வாரத்தில் இரண்டு நாள் மட்டும் அனுமதி உள்ள நிலையில் மழை காரணமாக ஆற்றில் குளித்து மகிழ வந்த உள்ளூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை