ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா புஷ்ப யாகத்துடன் நேற்று நிறைவடைந்தது.நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். பல்வகை மலர்களால் பூக்கோலம் இடப்பட்டிருந்தது. பிரபு பட்டர் தலைமையில் புஷ்பயாக பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று நடந்த புஷ்ப யாகத்துடன் ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா நிறைவடைந்தது