உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்

ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் புஷ்ப யாகத்துடன் நேற்று நிறை வடைந்தது. இக்கோயிலில் ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா துவங்கியது. ஜூலை 24ல் 5 கருட சேவை, ஜூலை 26ல் ஆண்டாள், ரெங்க மன்னார் சயனசேவை, ஜூலை 28ல் தேரோட்ட திருவிழா நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக் குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளினர். அங்கு பல்வேறு மலர்களால் பூக்கோலம் இடப்பட்டு புஷ்பயாக பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !