உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அடி தபசு சட்ட தேரோட்டம்

அடி தபசு சட்ட தேரோட்டம்

சிவகாசி : சிவகாசி சிவன் கோயிலில் ஆடி தபசு திரு விழாவை முன்னிட்டு சட்ட தேரோட்டம் நடந்தது. சிவகாசி சிவன் கோயிலில் ஆடி தபசு திருவிழா ஜூலை 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடை பெறும் திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாள் யானை, சிம்மம், காமதேனு, கிளி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 9ம் நாள் திருவிழாவான நேற்று சட்ட தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11ம் நாள் திருவிழாவான ஆக.8ல் விஸ்வநாதர் ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்பாளுக்கு தபசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி