மேலும் செய்திகள்
தொழில்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சான்றிதழ்
06-Oct-2025
சிவகாசி: சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் வேதியியல் மாணவர்களுக்கு பட்டாசு ஆலை போர்மேன் பயிற்சி வகுப்பு நவ. ல் தொடங்குகிறது. சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்களுக்கு வேதிப்பொருள் கலவை, மணி மருந்து உற்பத்தி, வெடி மருந்து செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடித்த போர்மேன்கள் மட்டுமே பட்டாசு ஆலைகளில் பணிபுரிய முடியும். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் கடந்த ஆண்டு சிவகாசி அரசு கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு பட்டாசு உற்பத்தி பயிற்சி அளித்து போர்மேன் சான்றிதழ் வழங்கப்பட்டது. இளங்கலை வேதியியல் இரண்டாம் ஆண்டு, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் பட்டாசு ஆலைகளில் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கான பயிற்சி வகுப்பு நவ. 3ல் தொடங்குகிறது. நவ. 7 வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
06-Oct-2025