மேலும் செய்திகள்
சதுரகிரியில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி
31-Jul-2025
வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் நேற்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டது. அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து வருஷநாடு மலைப்பகுதி செல்லும் வனப்பகுதி பீட் 4 என்ற இடத்தில் ஆடி அமாவாசை அன்று தீப்பிடித்தது. வனத்துறையினர் அணைத்தனர்.ஆனாலும் வெயிலின் தாக்கத்தால் புகைமூட்டம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களிலும் அதிகாலை முதல் காட்டு தீ பற்றி எரிந்தது. வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2:00 மணி முதல் மீண்டும் சாப்டூர் வனச்சரக பீட் 5 வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்தது. இதனை வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதியில் இருந்தே மக்கள் பார்க்க முடிந்தது. வத்திராயிருப்பு வனத்துறையினரின் 15 பேர் கொண்ட குழு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை நிலவும் சூழ்நிலையை பொறுத்தே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
31-Jul-2025