உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கான்சாபுரம் அத்தி கோயில் மலைக்கும் பரவிய காட்டுத்தீ

கான்சாபுரம் அத்தி கோயில் மலைக்கும் பரவிய காட்டுத்தீ

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் அழகர் கோயில் மலைப் பகுதியில் பிடித்த காட்டுத் தீ தற்போது கான்சாபுரம் அத்தி கோயில் மலை பகுதிக்கும் பரவியுள்ளது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு நாட் களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்துார் அழகர்கோயில் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீவில்லி புத்துார் மலைப் பகுதியில் காட்டுத்தீ கட்டுக்குள் வந்தாலும், கடந்த 2 நாட்களாக கான்சாபுரம் அத்தி கோயில் மலைப் பகுதியில் தீ எரிந்து வருகிறது. இதனையடுத்து கூடுதல் வனத்துறையினர் தீயை அணைக்கும் பகுதி யில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை