உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு தொழிலை முடக்க தி.மு.க., அரசு சதி செய்கிறது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

பட்டாசு தொழிலை முடக்க தி.மு.க., அரசு சதி செய்கிறது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

சிவகாசி : ''தொடர் ஆய்வு காரணமாக பதட்டத்துடன் பட்டாசு தொழில் செய்வதால் உற்பத்தி குறைந்துள்ளது. பட்டாசு தொழிலை முடக்க தி.மு.க., அரசு சதி செய்கிறது'', என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். சிவகாசியில் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில்: அ.தி.மு.க., ஆட்சியில் பட்டாசு விபத்து ஏற்பட்டால் விபத்து வழக்கு பதிவு செய்யப்படும். ஆனால் தி.மு.க., ஆட்சியில் விபத்து நடந்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் வகையில் கொலை வழக்கு பதிவு செய்வதால் பட்டாசு ஆலை உரிமையாளர் ஓடி ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர் ஆய்வு காரணமாக பதட்டத்துடன் பட்டாசு தொழில் செய்வதால் உற்பத்தி குறைந்துள்ளது. பட்டாசு தொழிலை முடக்க தி.மு.க., அரசு சதி செய்கிறது. பட்டாசு தொழிலை காக்க விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் விபத்து இல்லாத வகையில் பட்டாசு தொழில் நடக்கும். விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்றுத் தருவோம். பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வை நிறுத்தாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முற்றுகை இடப்படும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை