உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவு நாள்

முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவு நாள்

காரியாபட்டி: மல்லாங்கிணரில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் 28 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சீனிவாசன் எம்.எல்.ஏ., அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பாராஜ், ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன், முன்னாள் ஒன்றிய துணை தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணைச்செயலாளர் குருசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேகர், சிதம்பர பாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் சிவசக்தி, பேரூராட்சி கவுன்சிலர் முகமது முஸ்தபா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், நகர இளைஞரணி அமைப்பாளர் வீர ராஜன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன், வார்டு செயலாளர் அஜீஸ், வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.ஜி.ராஜகுரு, தெற்கு மாவட்ட பொருளாளர் கே.வி.கே.ஆர்.பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ