மேலும் செய்திகள்
மணல் திருட்டு: 3 பேர் கைது
22-Feb-2025
சிவகாசி: சிவகாசி அருகே எம். துரைச்சாமிபுரம் புளியங்குளம் கண்மாயில் சட்ட விரோதமாக மண் கடத்தப்படுவதாக சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து சப் கலெக்டர் தலைமையில் மண்டல துணை தாசில்தார் சீனிசெல்வம், வருவாய் ஆய்வாளர் மாரீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் பாண்டி, காமராஜ், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது மணல் அள்ளும் இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக மண் அள்ளி விற்பனைக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.இரு டிராக்டர்கள், ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட டிரைவர்கள் கருப்பசாமி, கருணாகரன், வினோத், வாகன உரிமையாளர் கோவிந்தன் ஆகிய 4 பேரை மாரனேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
22-Feb-2025