உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீசார் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு பெண் உட்பட நால்வர் கைது

போலீசார் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு பெண் உட்பட நால்வர் கைது

சிவகாசி,:விருதுநகர்மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் மூதாட்டியிடம் போலீசார் எனக்கூறி நகை பறித்த பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சந்திரா 75. இவர் மே 10 ல் நாடார் நந்தவனத் தெருவில் நடந்து சென்ற போது டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இவரை வழிமறித்து , 'இங்கு சண்டை நடந்து கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் அணிந்துள்ள செயினை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்' எனக்கூறியுள்ளனர். தொடர்ந்து அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் செயினை கழட்டி தரச் சொல்லி 'பேப்பரில் மடித்து தருகிறோம்' என்றனர். மூதாட்டியிடம் வாங்கிய செயினை வைத்துக் கொண்டு போலி நகையை பேப்பரில் மடித்து கொடுத்து தப்பினர். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி., பாஸ்கர் தலைமையில் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து விசாரித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக திருமங்கலத்தில் பதுங்கி இருந்த திருமங்கலம் கலைஞர் நகரை சேர்ந்த முகமது ஈஷா 24, வாசித் உசேன் 46, இவரது மனைவி பரிதா பீவி 45, கோவில்பட்டியை சேர்ந்த நகை ஆசாரி ஆறுமுகம் 54, ஆகிய நால்வரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !