கந்துாரி விழா
நரிக்குடி: நரிக்குடி வீரசோழனின் மிலாடி நபி நிறைவு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கந்துாரி விழா நடந்தது. நுாற்றுக்கு மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன. இதில் ஆட்டுக்கிடாயின் முக்கிய பாகங்கள் ஏலம் விடப்பட்டது. ரூ.100, 350 வரை ஏலம் எடுத்தனர். மற்ற பாகங்கள் சமைக்கப்பட்டன. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அன்னதான விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.