உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மயானத்தில் குப்பை குவிப்பு

மயானத்தில் குப்பை குவிப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சி மயானத்தில் குப்பைகளை கொட்டி குவித்து இருப்பதால் இறுதி சடங்கு செய்பவர்கள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பாலையம்பட்டி ஊராட்சி. இதன் மயானம் மதுரை -- துாத்துக்குடி நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது. இதில் கோபாலபுரம், பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் என தனித்தனியாக இடம் உள்ளது. தண்ணீர் வசதி, சடங்குகள் செய்ய இட வசதி உள்ளிட்டவைகள் இருந்தாலும், மயானம் முழுவதும் ஊராட்சி மூலம் குப்பைகளை கொட்டி குவித்துள்ளனர். இதில், ஏற்படும் துர்நாற்றம், ஈக்கள் மொய்ப்பதால் இறுதிச் சடங்கு செய்பவர்கள் அவதிப்படுகின்றனர். மழை காலமானால் மயானத்தில் நுழைய முடியாத வகையில் நாற்றம் எடுக்கிறது. ஊராட்சி நிர்வாகம் மயானத்தில் குப்பை கொட்டுவதை தவிர்த்து முறையாக சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை