உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூடாமல் செல்லும் குப்பை வாகனங்கள் --காற்றில் சிதறுவதால் சுகாதாரக்கேடு

மூடாமல் செல்லும் குப்பை வாகனங்கள் --காற்றில் சிதறுவதால் சுகாதாரக்கேடு

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட குப்பை சேகரிக்கும் டிராக்டர் வாகனம் வலை போட்டு மூடாமல் கொண்டு செல்வதை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜபாளையம் நகர் பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் டிராக்டர், லாரிகள் மூலம் சஞ்சீவி மலை பின்புறம் உள்ள உரக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவை முறையாக தார்ப்பாய், வலை மூலம் மூடி கொண்டு செல்ல வேண்டும்.ஆனால் குப்பையை எடுத்துச் செல்லும் சில வாகனங்கள் வலை போட்டு மூடாமல் எடுத்துச் செல்வதால் டிராக்டரின் வேகம், காற்று வீசுவதற்கு ஏற்ப குப்பை கழிவுகள் சாலையில் சிதறி கொண்டு செல்வதுடன் பாதசாரிகள், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது.காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார கேடும் ஆங்காங்கே ரோட்டில் குப்பை பறந்து விழுந்து சுகாதார கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே வாகனங்களில் கொண்டு செல்லப்படும் குப்பை மீது தார்ப்பாய் அல்லது பாதுகாப்பு வலையால் மூடி எடுத்துச் செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !