உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிமகன்களின் ஆபாச பேச்சு: 1098க்கு சிறுமி போன்

குடிமகன்களின் ஆபாச பேச்சு: 1098க்கு சிறுமி போன்

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆமணக்கு நத்தம் கிராமத்தில் குடிமகன்களின் ஆபாச பேச்சு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக 14வயது சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 க்கு போன் செய்ததால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய களப்பணியாளர் சிறுமியிடம் நேரில் விசாரணை செய்தார்.அருப்புக்கோட்டை அருகே ஆமணக்கு நத்தம் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான 14 வயது சிறுமி, நேற்று முன்தினம் இரவு 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தங்கள் பகுதியில் குடிமகன்கள் குடித்துவிட்டு ஆபாசமாக பேசுவதால் மன உளைச்சல் ஏற்படுவதாக புகார் கூறினார்.சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த களப்பணியாளர் சாரதா உடனடியாக சிறுமியின் ஊருக்குச் சென்று நேரில் விசாரித்தார், பின் சாரதா பந்தல்குடி போலீசாரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ