காங்., மவுன அஞ்சலி
சாத்துார்: சாத்துார் வடக்கு ரத வீதியில் காங்கிரஸ் சார்பில் காஷ்மீர் பஹல் காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 26 நபர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுதிரி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ஜோதி நிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.