உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நஷ்டஈடு வழங்காததால் ஸ்ரீவி.,யில் அரசு பஸ் ஜப்தி

நஷ்டஈடு வழங்காததால் ஸ்ரீவி.,யில் அரசு பஸ் ஜப்தி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சுந்தரபாண்டியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமராஜ் 46, அக்கவுண்டண்ட்டாக பணி யாற்றினார். இவர் 2022 மே 23 ல் அழகாபுரி அருகே டூவீலரில் செல்லும்போது அரசு பஸ் மோதி காயமடைந்தார். இது தொடர்பாக இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ. 3.33 லட்சம் இழப்பீட்டை திண்டுக்கல் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் வழங்க 2024ல் ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் இழப்பீடு வழங்கவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திண்டுக்கல் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று மதியம் தேனியில் இருந்து ராஜபாளையம் சென்ற அரசு பஸ்ஸை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை