உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜயகரிசல் குளம் அகழாய்வு பணிகளை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

விஜயகரிசல் குளம் அகழாய்வு பணிகளை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

சிவகாசி : வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை மம்சாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, சங்கு வளையல்கள், வட்ட சில்லு, சூது பவள மணி உள்ளிட்ட 4100 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடந்த இரு அகழாய்வு பணிகளில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு வெளி மாவட்ட பள்ளி கல்லுாரி மாணவர்கள் வருகின்றனர்.இந்நிலையில் அகழாய்வு பணிகளை பார்வையிடுவதற்காக சிவகாசி அருகே மம்சாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வருகை தந்தனர். இவர்கள் அகழாய்வு பணிகளையும், கண்காட்சியையும் பார்வையிட்டனர். அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி விளக்கம் அளித்தார்.அகழாய்வு இயக்குனர் கூறுகையில், அகழாய்வு பணிகளை பார்வையிடுவதற்காக ஏற்கனவே விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளி கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்துள்ளனர்.தற்போது மாணவர்களுக்கு தொல்லியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இங்கு பல்வேறு அரிதான பொருட்கள் கிடைத்து வருவதால் அதிகமானோர் வருகின்றனர். அவர்களுக்கு அகழாய்வு பணிகள் குறித்தும் பொருட்கள் குறித்தும் விளக்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ