உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லாரியில் கொண்டு சென்ற ஜல்லி ரோட்டில் சிதறியதால் அவதி

லாரியில் கொண்டு சென்ற ஜல்லி ரோட்டில் சிதறியதால் அவதி

சிவகாசி; சிவகாசியில் ஜல்லி கற்களை அதிகளவில் திறந்த நிலையில் ஏற்றி வந்த லாரியிலிருந்த கற்கள் ரோட்டில் சிதறியதில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.சிவகாசி அருகே எதிர்கோட்டை, மாரனேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் குவாரிகள் இயங்குகின்றன. இங்கிருந்து லாரி, டிராக்டர்களில் கிரஷர் துாசி ஜல்லிக்கற்கள் ஏற்றி வரப்படுகின்றது. இவ்வாறு கொண்டு வரப்படும் கற்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை அதிகமாக வாகனங்களில் ஏற்றப்படுகின்றது. மூடி பாதுகாப்பாக கொண்டு வருவதில்லை. திறந்த நிலையில் அதிக அளவில் கற்கள் இருப்பதால் லாரிகள், டிராக்டர்கள் வேகமாக செல்லும்போது, வேகத்தடையில் ஏறி இறங்கும் போதும் கற்கள் சிதறி கீழே விழுகின்றது.இதனால் அருகில் டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். சில நேரங்களில் பின்னால் டூவீலரில் வருபவர்கள் தடுமாறி விழுகின்றனர். தவிர கற்கள் வாகனங்களின் மீது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.நேற்று காலையில் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த லாரி திடீரென பிரேக் பிடித்ததில் அதிலிருந்து ஜல்லிகள் சிதறி ரோட்டில் விழுந்த தால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதேபோல் நகர் முழுவதுமே ரோட்டில் ஆங்காங்கே கற்கள் சிதறிக்கிடந்து வாகன ஓட்டிகளை அவதிப்பட வைத்தது. எனவே கற்கள் ஏற்றி வரும் லாரி, டிராக்டர்கள் சரியான அளவினை ஏற்றி பாதுகாப்பாக தார்ப்பாயை வைத்து மூடி வர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை