உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாய்களில் நீர் இருப்பால் மகிழ்ச்சி- 2ம் போக நெல் சாகுபடி பணிகள் துவக்கம்

கண்மாய்களில் நீர் இருப்பால் மகிழ்ச்சி- 2ம் போக நெல் சாகுபடி பணிகள் துவக்கம்

சேத்துார் ; சேத்தூர் அருகே தேவதானம் விவசாய சாகுபடி பகுதிகளில் கண்மாய் நீர் இருப்பு திருப்தியாக உள்ளதால் இரண்டாம் போகம் நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கண்மாய் பகுதிகளில் இந்த ஆண்டு பருவ மழையால் தற்போது வரை முழுமையான நீர் இருப்பு உள்ளது.தேவதானம், கோவிலுார், சேத்துார், ராஜபாளையம், தெற்கு வெங்காநல்லுார், கொல்லம் கொண்டான் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.இதில் மற்ற பகுதிகளை விட தேவதானம் சாஸ்தா கோயில் நீர் பிடிப்பை ஒட்டிய கோவிலுார், வடக்கு தெற்கு தேவதானம் உள்ளிட்ட பாசன நிலங்களில் நெல் அறுவடை பணிகள் முழுமை அடைந்து வருகிறது.நீர்த்தேக்கத்தில் நடப்பாண்டு நீர் இருப்பு திருப்தியாக உள்ளதுடன் கண்மாய்களின் நீர் குறையாமல் உள்ளதால் நகரகுளம், பெரியகுளம், வாண்டையார் குளம் ஆயக்கட்டு பாசன வயல்களில் நெல் நாற்றங்கால் அமைத்துள்ளதுடன் உழவு உள்ளிட்ட நிலங்களை தயார் படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ