உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்படாத பம்பிங் ஸ்டேஷன்களால் தலைவலி

செயல்படாத பம்பிங் ஸ்டேஷன்களால் தலைவலி

விருதுநகர்: விருதுநகரில் நகராட்சியின் தோல்வி அடைந்த பாதாளசாக்கடை திட்டத்தில் செயல்படாத லிப்டிங், பம்பிங் ஸ்டேஷன்களால் மீண்டும் தலைவலி ஏற்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாமல் ஓடையில் கழிவுநீரை விடுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விருதுநகரில் பாதாளசாக்கடை திட்டம் 2005ல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் வந்தது முதலே பல்வேறு குறைபாடுகள். கடந்த சில ஆண்டுகளாக மேன்ஹோல் வழியாக கழிவுநீர் லீக் ஆகியது. இதனால் வந்து செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்களில் அடித்து செல்லப்பட்ட கழிவுநீர் சக வாகன ஒட்டிகள் மீது தெறித்து பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் செயல்படாத பம்பிங் ஸ்டேஷன்களால் தலைவலி தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் பாண்டியன் நகர் தபால் நிலையம் முன்பு, மதுரை ரோடு ஆண்கள் பள்ளி முன்பு, கச்சேரி ரோடு, அல்லம்பட்டி காமராஜர் பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் லீக் ஆகும். மழைக்காலங்களில் மீண்டும் மீண்டும் லீக் ஆகி தொற்று நோய் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது மீண்டும் சுத்திகரிப்பு நிலைய பணிகள் மந்தமாகி உள்ளன. லிப்டிங், பம்பிங் ஸ்டேஷன்களும் செயல்படாமல் உள்ளன.பாண்டியன் நகர் அருகே பம்பிங் ஸ்டேஷனில் சுத்திகரிப்பு ஏதும் நடக்கவில்லை. கழிவுநீர் அப்படியே அருகில் உள்ள நீர்வரத்து ஓடையில் விடப்படுகிறது. இதனால் சுற்றுப்பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் நீர்வரத்து ஓடைகளில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ