மேலும் செய்திகள்
பரவலாக சாரல் மழையால்குளிர்ச்சியான சீதோஷ்ணம்
13-Mar-2025
விருதுநகர் : விருதுநகரில் நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஏப். 2ல் 157.10 மி.மீ., ஏப். 3ல் 180 மி.மீ., மழை பதிவானது. நேற்று முன்தினம் மழையின்றி வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்றும் பகல் முழுதும் விருதுநகரில் வெயில் வாட்டியது. மாலை கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது.பின் இடி, மின்னல், பலத்த காற்றுடன் சுமார் 2:00 மணி நேரத்திற்கும் மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. சிவகாசி திருத்தங்கலில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.
13-Mar-2025