உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடி, மின்னலுடன் கனமழை

இடி, மின்னலுடன் கனமழை

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்துார் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது.ஸ்ரீவில்லிபுத்துார் கிருஷ்ணன் கோவில், வன்னியம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 5:30 மணிக்கு மேல் பலத்த இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் பஸ் ஸ்டாண்ட், பஜார் வீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி கல்லூரி மாணவர்கள் வீடு திரும்ப சிரமப்பட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால் வியாபார நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகுபெய்த கன மழையினால் நகரில் குளிர்ந்த சூழல் உருவானது. *ராஜபாளையம், சாத்துாரில் நேற்று மாலை முதல் மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் 6:00 மணிக்கு மேல் சாரல் மழை இடி மின்னலுடன் பெய்தது. இதனால் குளிர்ந்த சூழலுக்கு மாறி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை