வேகத்தடைகளில் நெடுஞ்சாலையினர் வர்ணம்
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள 6 வேகத்தடைகளில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வெள்ளை வர்ணம் பூசினர்.ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ரோட்டில் ஆத்து கடை சந்திப்பு, பெருமாள் பட்டி, குலாலர் தெரு, ரமேஷ் தியேட்டர், ஊராட்சி அலுவலகம் ஆகிய ஆறு இடங்களில் வேக தடைகள் உள்ளது.தற்போது இந்த ரோட்டின் வழியாக வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் விபத்துக்களை தடுக்க மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பரதன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சாலை பணியாளர்கள் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணங்களை பூசினர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.