மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீ வித்யா கலை, அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், மாவட்ட போலீஸ் நிர்வாகம், சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனிதநேய வார விழா கல்விக் குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ், கல்லுாரி துணைத் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.இதில் எஸ்.பி., கண்ணன் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., விஜயகுமார், டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ், ராஜாமணி, கல்லுாரி முதல்வர் கணேசன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ், நுகர்வோர் பாதுகாப்பு குழு அரசு உறுப்பினர் முஹம்மது எகியா, புள்ளி இயல் ஆய்வாளர் விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்துறை உதவி பேராசிரியர் ஜெனிபர் சங்கீதா நன்றி கூறினார்.
27-Jan-2025