உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை

மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை

சாத்துார் : சாத்துார் சிப்பிப் பாறையை சேர்ந்தவர் வீர மணிகண்டன், 37.அதே ஊரைச் சேர்ந்த பிரியா என்பவரை ஆறு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரியாவிற்கு அதே ஊரைச் சேர்ந்த கவுதம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீரமணிகண்டனை பிரிந்து பிரியா கவுதம் உடன் வசித்து வந்தார். இதனால் மன விரக்தி அடைந்த வீர மணிகண்டன் விஷம் குடித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மார்ச் 28 பலியானார்.வீரமணி கண்டன் சகோதரர் கருப்பசாமி அளித்த புகார் படி பிரியா, கவுதம், கவுதமின் தந்தை பேச்சி முத்து, தாயார் விமலா ,உறவினர்கள் பொன் மாடத்தி, விஜயா ஆகியோர் மீது வழக்கு பதிந்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ