மேலும் செய்திகள்
ரோட்டில் தேங்கிய கழிவு நீர் வாகன ஓட்டிகள் அவதி
10-Oct-2024
சிவகாசி: சிவகாசி விளாம்பட்டி ரோடு மாலையம்மன் கோயிலில் இருந்து காளியப்பா நகர் வழியாக செல்லும் ஓடையில் கோரைப் புற்கள், சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் மழைநீர் செல்ல வழி இல்லை. இதனால் ஓடையை துார் வார வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.சிவகாசி விளாம்பட்டி ரோடு மாலையம்மன் கோயிலில் இருந்து காளியப்பன் நகர் வழியாக ஓடை செல்கின்றது. மழைக்காலங்களில் தண்ணீர் ஓடையின் வழியாக நீர் நிலைகளுக்கு செல்லும். இந்நிலையில் ஓடை முழுவதுமே கோரைப்புற்கள், சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. தவிர ஓடை முழுவதுமே பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது.கழிவு நீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறவும் வழியில்லை.இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகின்றது. குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடை செல்வதால் கொசு உற்பத்தியாகி மக்களுக்கு தொற்று நோயினை ஏற்படுத்துகிறது.எனவே உடனடியாக ஓடையினை துார்வார வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
10-Oct-2024