உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்படாத புறக்காவல் நிலையங்கள்.... திறக்கப்படுமா குற்றங்கள் அதிகரிப்பதால் மக்கள் வேதனை

செயல்படாத புறக்காவல் நிலையங்கள்.... திறக்கப்படுமா குற்றங்கள் அதிகரிப்பதால் மக்கள் வேதனை

அருப்புக்கோட்டை: மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும்வகையில் பல பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள்அமைக்கப்பட்டும் திறக்காமல் பூட்டியே கிடப்பதால் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. பல ஊர்களில் நடைபெறும் கொலை திருட்டுச் சம்பவங்கள் கொள்ளை சந்தேகப்படும் நபர்கள் ஆகியோரை பிடிப்பது, மக்களுக்கு விரைவான காவல்துறை சேவைகளை வழங்குவது, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, தொலைதூர பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்பை குறைத்து விரைவில் கண்டுபிடிக்கும் வகையில் நகர் எல்லை, பஸ் ஸ்டாண்டுகளில் புற காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது. இங்கு இரவு பகலாக போலீசார் கண்காணித்தும் சந்தேகப்படும் அவர்களைப் பிடித்து விசாரிக்கவும் இவை உருவாக்கப்பட்டது. நகரின் விரிவாக்க பகுதிகளில் ஏதேனும் விபத்து குற்றச் செயல்கள் நடந்தால் தூரத்தில் இருக்கும் ஸ்டேஷனுக்கு செல்வதை விட அருகில் உள்ள புறகாவல் நிலையத்தில் புகார் செய்ய மக்களுக்கு வசதியாக இருக்கும். பல இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன போதிலும் பெரும்பாலானவை செயல்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. அருப்புக்கோட்டை அருகே காந்தி நகர், பாலையம்பட்டி விலக்கு, ராமசாமிபுரம், பாவடி தோப்பு, பந்தல்குடி ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இவை அமைக்கப்பட்டன. அனைத்தும் பயன்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி., கேமரா வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை இங்கே எட்டி கூட பார்ப்பதில்லை இரவு நேரங்களிலும் இருப்பதில்லை. நகரில் டூவீலர்கள் திருட்டு, கஞ்சா விற்பனை, செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. புற காவல் நிலையங்கள் செயல்பட்டால் இவற்றை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். குற்றவாளிகளை விரைவாக பிடிக்க வசதியாக இருக்கும். இவற்றில் தேவையான வசதிகளை செய்து புற காவல் நிலையங்கள் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தின் பல ஊர்களில் செயல்படாமல் உள்ள புற காவல் நிலையங்களை செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை