உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு

சாத்துாரில் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு

சாத்துார் : சாத்துாரில் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு பாலிதீன் பைகளை தடை செய்துள்ளது மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வலியுறுத்தி மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை துவக்கி வைத்துள்ளது.இந்த நிலையில் சாத்துார் பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது.நகராட்சி அலுவலர்கள் ஆங்காங்கே கடைகளை சோதனை இட்டுபாலித்தீன் கவர்களை பறிமுதல் செய்து வந்த போதும் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பாலிதீன் கவர்களில் உணவு பொருட்களை வாங்கி செல்பவர்களுக்குபல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.மேலும் உணவுப் பொருட்கள் உள்ள பாலிதீன் கபர்களை தின்பதால் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. எனவே சாத்துார் பகுதியில் பாலிதீன் பயன்பாட்டை கட்டுப்படுத்திடநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை