உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கிருஷ்ணன் கோவிலில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி

 கிருஷ்ணன் கோவிலில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவிலில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். மதுரை- -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலை சுற்றி பல கிராமங்களும், பல ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பல்கலையும் உள்ளதால், வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேணுகோபால்சாமி கோவிலில் இருந்து குன்னூர் ரோடு வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. டூவீலர்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் காலை, மாலை வேலை நேரங்களில் ரோட்டை கடக்கும் மக்கள் விபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்றி, சேத்தூரில் உள்ளது போல் அனைத்து வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணன் கோவில், சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ