உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 79வது சுதந்திர தின விழாவில் கலெக்டர் சுகபுத்ரா கொடியேற்றி போலீசார், தீயணைப்பு துறையினர், மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். மூவர்ண பலுான்கள், வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார். மாவட்ட போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 50 பேர், மாவட்ட நிலை அலுவலர்கள் 14 பேர், 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 7 பேர், 20 ஆண்டுகளாக விபத்தில்லா சேவை புரிந்த டிரைவர், சதுரகிரி மலைப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய 7 அலுவலர்கள், சிறந்த விவசாயிகள், பசுமை சாதனையாளர்கள் என பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த மொத்தம் 258 பேருக்கு நற்சான்றுகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார். பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கேசவதாசன், சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * விருதுநகர் தினமலர் நகரில் தினமலர் கிளை அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது. * எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., கண்ணன் கொடி ஏற்றினார். போலீசார் பங்கேற்றனர். * நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் கொடியேற்றினார். கமிஷனர் சுகந்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றியத்தில் பி.டி.ஓ., சீனிவாசன் கொடியேற்றினார். * தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் அதன் உதவி இயக்குனர் ரத்தினம் கொடியேற்றினார். * விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் கட்சி அலுவலக வளாகத்தில் கொடி ஏற்றினார். செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் பங்கேற்றனர். * காங். அலுவலகத்தில் நகரத் தலைவர் நாகேந்திரன் கொடி ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து,நகராட்சி கொறடா பால்பாண்டி பங்கேற்றனர். * விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் செயலாளர் தர்மராஜன் கொடி ஏற்றி பேசினார். கல்லுாரி பொருளாளர் ஸ்ரீமுருகன், தென்காசி ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவன தொழில்நுட்ப பணியாளர் சக்தி கிருஷ்ணா கல்லுாரிக் கொடியை ஏற்றினர். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு சான்றுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. துணை தலைவர் பாலகிருஷ்ணன், முதல்வர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * செந்திக்குமார நாடார் கல்லுாரியில் செயலாளர் மகேஷ் பாபு கொடி ஏற்றி வைத்து என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., செஞ்சுருள் சங்கம், உடற்கல்வித்துறை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். முதல்வர் சாரதி வரவேற்றார். கல்லுாரி தலைவர் சம்பத்குமார், உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன் வாழ்த்தினர். * வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் செயலாளர் மதன் கொடி ஏற்றினார். வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் லலிதா, கல்லுாரி பொருளாளர் சந்திரசேகரன், தலைவர் பழனிச்சாமி பேசினர். கல்லுாரி பேரவை தலைவி நாவரசி நன்றிக்கூறினார். * ஸ்ரீவித்யா கல்லுாரியில் குழுமத்தலைவர் திருவேங்கடராமானுஜ தாஸ் கொடி ஏற்றினார். கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். *வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மானேஜிங் போர்டு தலைவர் மோகன் கொடி ஏற்றினார். உப தலைவர் ராஜன், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெகதீசன், முதல்வர் பிரேம் ஆனந்த் பேசினர். *ஷத்திரிய வித்யாசாலா மானேஜிங் போர்டு பள்ளிகளில் செயலாளர் முரளிதரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் மானேஜிங் போர்டு பொருளாளர் ரத்தினவேல் கொடி ஏற்றினார். கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் தலைவர் செல்வகணேஷ் கொடி ஏற்றினார். திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப்பள்ளியில் செயலாளர் முரளிதரன் கொடி ஏற்றினார். கே.காமராஜ் வித்யாசாலா ஆரம்பப்பள்ளியில் போர்டு உறுப்பினர் ரவீந்திரன், சுப்பிரமணிய வித்யாலயாவில் உப தலைவர் சின்னக்கண், கி.பெ.பெரியகருப்ப நாடார் துவக்கப்பள்ளியில் போர்டு உறுப்பினர் மாணிக்கவேல், கே.வி.எஸ்., நுாற்றாண்டுப்பள்ளியில் இணைச்செயலாளர் அருண், சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் போர்டு உறுப்பினர் சிவானந்தம் கொடி ஏற்றினர். சத்திரப்பட்டி: பாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் மாடசாமி தலைமை வகித்தார். செயலர் டாக்டர் சுரேஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகி சாந்தி வரவேற்றார். முதல்வர் தினகரன் கொடி ஏற்றினர். பேராசிரியர்கள், மாணவர்கள் அலுவலர்கள் பங்கேற்றனர் . * சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி, ஆறுமுகம் பழனி குரு சி.பி.எஸ்.இ பள்ளியில் நிறுவனர் ஆறுமுகம் தலைமை வகித்து கொடியேற்றினார். தாளாளர் பழனி குரு முன்னிலை வகித்தார். முதல்வர்கள் நாகலட்சுமி, சத்தியமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி சுதந்திர தின விழாவில் முதல்வர் கணேசன் கொடியேற்றினார். துணை முதல்வர் ராஜ கருணாகரன், நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் வரவேற்றார். என்.சி.சி மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது. சுதந்திர தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் அலுவலர்கள் பங்கேற்றனர். *ரா ஜூ க்கள் கல்லுாரியில் ரோட்டரி தலைவர் ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா கொடியேற்றினார். முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஐயப்பன் வரவேற்றார். போதை ஒழிப்பு வலியுறுத்தி மினி மாரத்தான், பேச்சு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார், என்.சி.சி அதிகாரி சக்திவேல் செய்தனர். * எ.கா.த தர்மராஜா பெண்கள் கல்லுாரியில் தாளாளர் கிருஷ்ணமா ராஜூ தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் சுதாகர் கொடியேற்றினார். நிர்வாகி ரமணி, கல்லுாரி தலைவர் கீதா நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முதல்வர் லட்சுமி வரவேற்றார். * ராஜபாளையம் பி.ஏ. சி.எம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். தமிழ் ஆசிரியர்கள் அருண், பார்த்திபன் பேசினர். மாணவர்கள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன. ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார். * ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.அம்மணி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ரோகிணி தேவி தலைமை வகித்து கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. *ந.அ.அன்னப்ப ராஜா மேல்நிலை பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் கொடியேற்றினார். முன்னாள் மாணவர் முகுந்த ராமராஜா பங்கேற்றார். என்.சி.சி, என்.எஸ்.எஸ், சாரண சாரணீய அமைப்பு உள்ளிட்ட மாணவர் அணிவகுப்பு நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார். * ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சந்திரன் ராஜா தலைமை வகித்து கொடியேற்றினார். முதல்வர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் கலை நிகழ்ச்சி, போட்டிகள் நடந்தன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வெங்கட பெருமாள் செய்திருந்தார். * வைமா வித்யாலயா, கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் சுதந்திர தின விழாவில் வைமா கல்வி நிறுவனங்களின் தலைவர் வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்து கொடியேற்றி பேசினார். மேனேஜிங் டிரஸ்டி அருணா முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக மதுரை ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனர் ஆனந்த் குமார் பங்கேற்றார்.சுதந்திர தின விழா போட்டிகள் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப் பட்டது. முதல்வர்கள் திருமலை ராஜன், பானுப்பிரியா, கற்பக லட்சுமி ஏற்பாடுகளை செய்தனர். *ராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப் பள்ளியில் செயலர் பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார். தலைமையாசிரியை மகேஸ்வரி வரவேற்றார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் வாசுகி நன்றி கூறினார். *சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் இணைச் செயலாளர் சீனிவாசன் தேசியக்கொடி ஏற்றினார். என். சி.சி.மாணவர்கள் அணி வகுப்பு நடந்தது. என்.சி.சி. மாணவி செல்வ மீனா தேசிய அளவில் நடந்த போல்டரிங் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.அவரை முதல்வர் கிருஷ்ணவேணி பாராட்டினார். பேராசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.பேராசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். *கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் தமிழ்நாடு சிக்னல் கம்பெனி என். என் .சி. கட்டளை அதிகாரி கர்னல் டி.ஆர்.டி .சின்கா தலைமை வகித்து கொடியேற்றினார்.தேசிய மாணவர் படை மாணவர்களின் அறிவிப்பு நடந்தது. ஓய்வு பெற்ற கர்னல் பங்கஜ் நாராயணன் பேசினார். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர். *சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர். பொன்னுசாமி நாயுடு கல்வியல் கல்லுாரி, கே.ஆர்.பி., கலை அறிவியல் கல்லுாரி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்வியல் கல்லுாரி முதல்வர் கண்ணன், கலைக் கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி முன்னிலை வகித்தனர். கல்வியில் கல்லுாரி வரலாற்று பேராசிரியர் கிருஷ்ணபிரபா தேசியக்கொடி ஏற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு, பாரம்பரியம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரு கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி: மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருத்தங்கலில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேசியக்கொடி ஏற்றினார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். *சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேயர் சங்கீதா தேசியக்கொடி ஏற்றினார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தனர். *சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில். மாணவர் தலைவர் இந்துராணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தேசியக்கொடி ஏற்றினார். கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் தேவி பேசினார். அனைத்து துறையை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி அருள்ஜோதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் மங்கையர்க்கரசி, ஜோஸ்பின் ஸ்டெல்லா, மாணவர் பேரவை பேராசிரியர்கள் செய்தனர். *சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றினார். டீன் மாரிசாமி, பிச்சிப்பூ கலந்து கொண்டனர். கல்லுாரி தேசிய மாணவர் படையின் சிறப்பு அணி வகுப்பு நடந்தது. *சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் செயலர் செல்வராசன் தலைமை வகித்தார். மாணவி ஹரிணி வரவேற்றார். சென்னை டாடா ஆலோசனை சேவை குழுமம் செயல்பாட்டு ஆலோசகர் கார்த்தீஸ்வரன் தேசியக்கொடி ஏற்றினார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தேசிய உறுதிமொழி வாசித்தார். மாணவிகள் லக்சன்யா, மாரியம்மாள் பேசினர். மாணவன் அஸ்வத் சங்கர் நன்றி கூறினார். *சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பொறுப்பு முதல்வர் பரமேஸ்வரன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் வீமராஜ் வரவேற்றார். இந்திய ராணுவ ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படை ஹவில்தார் ஜெயமுருகன் பேசினார். தேசிய மாணவர் படை மாணவன் துர்கானந்த சண்முகன் நன்றி கூறினார். *சிவகாசி ஹயக் ரிவாஸ் சர்வதேச பள்ளியில் சுமித்தா பேசினார். பள்ளி தாளாளர் ஜெயக்குமார், தலைமை முதல்வர் பாலசுந்தரம், முதல்வர் அம்பிகா தேவி, துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம் சுதா கலந்து கொண்டனர். மாணவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேடம் அணிந்து வந்தனர். * சிவகாசி மாரனேரி கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் சுதந்திர தின விழா கோகுலாஷ்டமி கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் பிருந்தா தேசியக்கொடி ஏற்றினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தனலட்சுமி, தாளாளர் முத்துக்குமார் செய்தனர். *சிவகாசி ஆர்.எஸ்.ஆர்., சர்வதேச பள்ளியில் தலைவர் சண்முகையா தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் முத்துலட்சுமி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் மகேந்திரன் இயக்குனர் தனலட்சுமி, நிர்வாக உறுப்பினர் விஷ்ணு பிரியா கலந்து கொண்டனர். *சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட்டில் நிறுவனர் செய்யது ஜாகிர் உசேன், செயலாளர் ரகுமத்துல்லா, பொருளாளர் மாபு பாட்சா தலைமை வகித்தனர். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் முன்னிலை வகித்தார். திருத்தங்கல் பாஸ்டர் கலைவாணி தேசிய கொடி ஏற்றினார். பாஸ்டர் பிரகாஷ், ஷாபாஸ்கான் கோரி பள்ளிவாசல் முன்னாள் தலைவர் காதர்சா, செய்யது பாதுஷா, முத்து விலாசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். *சாத்துார் மேட்டமலை கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பி.எஸ்.என்.எல்., கல்வியில் கல்லுாரியின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் ராஜு, துணைத் தலைவர் பாப்பா தலைமை வகித்தனர். கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் உஷா தேவி பி.எஸ்.என்.எல்., கல்வியல் கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்து தேசிய கொடி ஏற்றினர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், தேசிய கொடியேற்றினார்.விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர். * பிள்ளையார் நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. மான்ராஜ் கொடியேற்றினார். சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அண்ணா நகரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். * ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் ரவி கண்ணன் கொடியேற்றினார். துணைத் தலைவர் செல்வமணி, கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். * கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேந்தர் ஸ்ரீதரன் தேசிய கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் விழாவில் துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், இயக்குனர்கள், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் பங்கேற்றனர். * சி.எஸ்.ஐ. சர்ச்சில் குருசேகர தலைவர் பால் தினகரன் தலைமையில் வட்டார கல்வி அலுவலர் முருகேசன் கொடியேற்றினார். சர்ச் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. * வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் கொடியேற்றினார். தாளாளர் விஜயகுமார், லயன் சங்க நிர்வாகிகள் டாக்டர் பால்சாமி, அறிவொளி முருகன், முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி, உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். * அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை மட்டும் அறிவியல் கல்லூரியில் செயலர் இளங்கோவன், ரமணாஸ் கல்வியியல் கல்லூரியில் செயலர் சங்கரநாராயணன் கொடியேற்றினர். வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசு துரைக்கண்ணம்மாள் சுதந்திர தினம், கட்டபொம்மன் பற்றியும் சிறப்புரையாற்றினார். ஓய்வு இராணுவ அதிகாரி இளங்கோ, சுபேதார் மேஜர் உதயசூரியன், மேஜர் கணேசன் ராணுவத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினர். கல்லூரிகளின் சேர்மன் ராமச்சந்திரன் வரவேற்றார். முதல்வர் தில்லை நடராஜன், துணை முதல்வர் பவுர்ணா, போக்குவரத்து செயலர் விக்னேஷ் கலந்து கொண்டனர். * கிரீன்விஸ்டா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் பரமசிவம் கொடியேற்றினார். பள்ளி தாளாளர் ராஜா முகமது சேட், எஜுகேஷனல் சொசைட்டி தலைவர் காஜா மைதீன், செயலாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆனந்தி வரவேற்றார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. * கே.எஸ்.எஸ். தியாகராஜன் மெட்ரிக் பள்ளியில் செயலர் சௌந்தரபாண்டியன் கொடியேற்றினார். பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். * எஸ்.பி.கே., ஜூனியர் பிரைமரி பள்ளியில் நாடார்கள் உறவின்முறை செயலாளர் சரவணன் கொடி ஏற்றினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. * எஸ். பி.கே., துவக்கப்பள்ளியில் உதவி செயலாளர் முருகன் கொடியேற்றினார். உறவின்முறை நிர்வாகிகள், கல்வி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். *காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் செந்தில் கொடியேற்றினார். கவுன்சிலர் முகமது முஸ்தபா கலந்து கொண்டார். *கோர்ட் வளாகத்தில் நீதிபதி யோகேஸ்வரன் கொடியேற்றினார். வக்கீல் சங்க தலைவர் அக்கினி தேவர் கலந்து கொண்டார். * செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் கீதா கொடியேற்றினார். முதல்வர் இமாகுலேட், துணை முதல்வர் கயல்விழி, லயன்ஸ் ஜாஸ்மின் தலைவர் ராஜாத்தி, பொருளாளர் சைனிலா ரூபி கலந்து கொண்டனர். *அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சரளா கொடியேற்றினார். * தாலுகா அலுவலகத்தில் தனி தாசில்தார் தேவாமிர்தம் கொடியேற்றினார். மண்டல துணை தாசில்தார் ராஜாத்தி கலந்து கொண்டார். *போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் கொடியேற்றினார். எஸ்.ஐ., ஷமிளா பேகம், எஸ்.எஸ்.ஐ.,கள் முத்துராமலிங்கம், கண்ணன், சொக்கப்பன், சுப்பிரமணியன், போலீசார்கள் சிவபாலன், சசி உட்பட பலர் கலந்து கொண்டனர். *மல்லாங்கிணரில் எஸ்.ஐ., மகேஸ்வரன் கொடியேற்றினார் *ஆவியூரில் எஸ்.ஐ., வினோத்குமார் கொடியேற்றினார். எஸ்.எஸ்.ஐ., கண்ணன் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை