மத்திய அரசை கண்டித்து இண்டி கூட்டணி ஆர்ப்பாட்டம்
விருதுநகர், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, இண்டி கூட்டணி சார்பில் தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மகாத்மா காந்தி நுாறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு முடக்க நினைக்கிறது. திட்டத்துக்கு கூடுதல் நிதி கோரப்பட்ட நிலையில் 40 சதவீதம் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என மாநில அரசின் மீது சுமையை ஏற்றியுள்ளது. இதனால் விவசாயிகள், பெண்கள் பாதிப்படைகின்றனர் என கோஷங்களை எழுப்பினர். நகராட்சி தலைவர் மாதவன், நகர செயலாளர் தனபாலன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, காங்.,கை சேர்ந்த பாலகிருஷ்ணசாமி, இ.கம்யூ., நிர்வாகி பாலமுருகன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சமுத்திரம் உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். *ஸ்ரீவில்லிபுத்துார் தி.மு.க. நகர செயலாளர் அய்யாவுபாண்டியன், ஒன்றிய செயலாளர் மல்லி ஆறுமுகம் தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்வமணி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன், மார்க் கம்யூ., மாவட்ட செயலாளர் அர்ஜுனன், காங்கிரஸ் நிர்வாகி பெரியசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். *தளவாய்புரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., லிங்கம், சீர்மரபினர் நல வாரிய துணைத் தலைவர் ராஜா அருண்மொழி, காங்.,மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி, ராஜபாளையம் நகராட்சி தலைவர் பவித்ரா, ம.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். * சாத்துாரில் தி.மு.க. நகரசெயலாளர் குருசாமி தலைமை வகித்தார். தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன் ,முன்னாள் ஊராட்சியை ஒன்றிய குழு தலைவர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இண்டி கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். * அருப்புக்கோட்டையில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் மணி, நகராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.