உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இந்திய கம்யூ., மாநாடு

இந்திய கம்யூ., மாநாடு

திருச்சுழி: திருச்சுழியில் இந்திய கம்யூ., கட்சியின் திருச்சுழி நரிக்குடி ஒன்றிய மாநாடு நடந்தது.முன்னாள் எம்.பி., லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி பேசினர். திருச்சுழி காட்டுநாயக்கர் சமுதாய மாணவர்களுக்கு ஜாதி சான்று வழங்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சி.டி., ஸ்கேன் அமைக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 5 ஆயிரமாக உயர்த்தி வேண்டும் என்றும், திருச்சுழி வழியாக சென்னை செல்லக்கூடிய ரயில்கள் திருச்சுழி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக செல்வம், துணை செயலாளர் பெரியண்ணன், பொருளாளர் ஜீவானந்தம், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை