இந்திய கம்யூ. மாநாடு
விருதுநகர்: விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய குழு மாநாடு நடந்தது. தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில குழு உறுப்பினர் செந்தில் குமார் வாழ்த்தினர். ஒன்றிய செயலாளராக பாலமுருகன், துணை செயலாளராக வடிவேல் முருகன், ராமசுப்பு, பொருளாளராக வீரமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டில் குமாரலிங்கபுரத்தில் ஜவுளி பூங்கா பணிகளை விரைந்து செய்வது, துலுக்கப்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து பயணிகள் ரயில்கள் நின்று செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.