மேலும் செய்திகள்
பயிர் கடன் அளவு நிர்ணய தொழில்நுட்ப குழு கூட்டம்
13-Oct-2025
விருதுநகர்: வேளாண் உட்கட்டமைப்புக்குரூ.26 கோடி கடன் வழங்க இலக்கு என விருதுநகரில் நடந்த மண்டல அளவிலான கருத்தரங்கில் வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். விருதுநகரில் வேளாண் விற்பனை, வணிகத்துறை, நபார்டு வங்கி சார்பில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி குறித்த கருத்தரங்கம் நடந்தது.வேளாண் இணை இயக்குநர் சுமதி வரவேற்றார். வேளாண் வணிக துணை இயக்குநர் செல்வி, நபார்டு வளர்ச்சி மேலாளர் அனுசா எலிசபெத், நேர்முக உதவியாளர்(விவசாயம்) அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் சுபா வாசுகி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் பேசினர். இதில் மத்திய அரசு, அறுவடைக்கு பிந்தைய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நீண்ட கால கடன் வசதி திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் கீழ் தமிழகத்தில் 13 ஆண்டுகளில் (2020-21 முதல் 2032-33 வரை) வங்கிகள் மூலம் பிணையற்ற குறைந்த வட்டி கடன் வழங்கப்படுகிறது. வேளாண் விற்பனை, வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு 2025-26 நிதியாண்டுக்கு ரூ.26 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.2 கோடி வரை கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 7ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டிக்குறைப்பு வழங்கப்படுகிறது என்பது தெரிவிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண், வணிக, தோட்டக்கலை துறைகள், நபார்டு, முன்னோடி வங்கி, கூட்டுறவுத்துறையினர், விவசாயிகள், தொழில்முனைவோர் பங்கேற்றனர்.
13-Oct-2025